2025 மே 02, வெள்ளிக்கிழமை

இரண்டாவது நாளாகவும்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார், றியாஸ் ஆதம்

 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் திட்டத்திலிருந்து அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் நீக்கப்பட்டதைக் கண்டித்து அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று     (7)  இரண்டாவது நாளாகவும்  பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

கடந்த வருடம் மேற்படி திட்டத்தில் இவ்வித்தியாலயமும் உள்வாங்கப்பட்டு 'ஏ' தரத்துக்கு மாற்றியமைக்கான ஏற்பாடு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மேற்படி வித்தியாலயத்துக்கு இன்று   மாணவர்கள் வருகை தராததையிட்டு கற்றல் செயற்பாடு  பாதிக்கப்பட்டதாக அவ்வித்தியாலய அதிபர் ஏ.எம்.மிஸ்வர் தெரிவித்தார்.

தங்களின் கோரிக்கைக்கு உரிய கல்வி அதிகாரியிடமிருந்து பதில் கிடைக்கும் வரையில் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்பதுடன்,  இன்று (8)  முதல் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகதுக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தமீம் ஆப்தீன் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்  தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர்  சென்று நிலைiயை ஆராய்ந்ததுடன், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியுடன்; மேற்படி பிரச்சினை தொடர்பில் தெரியப்படுத்தினர்.

இப்பிரச்சினை தொடர்பில்  உரிய கல்வி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தாம் உரிய பதில் வழங்குவதாக மாகாணக் கல்வி அமைச்சர் கூறியதாக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X