2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இரு பாடசாலைகளுக்கு பூட்டு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, சம்மாந்துறை  வலயத்தில் இரு பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.

சம்மாந்துறைக் கோட்டத்திலுள்ள தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயமும் இறக்காமம் கோட்டத்திலுள்ள குடுவில் அல்ஹிறா வித்தியாலயமும் இவ்வாறு பூட்டப்பட்டுள்ளன.

தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றிய கல்விசாரா ஊழியரொருவருக்கு கொரோனாத் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொழும்புத் துறைமுகத்திலிலிருந்து கடந்த வாரம் வந்த சம்மாந்துறை ஊழியரொருவரின் உறவினர்களை பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தியதில், முதல் கொரோனாத் தொற்றாளியான துறைமுக ஊழியரின் மைத்துனரான மேற்படி கல்விசாரா ஊழியர் அடையாளர் காணப்பட்டுள்ளார். இதன்போது, மேலும் நால்வரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது கல்விசாரா ஊழியர், கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது குடும்ப உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குடுவில் பிரதேசத்திலும் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, அக்கிராமத்தவர் விடுத்த வேண்டுகோளிலும் அங்கு இடம்பெற்ற கோட்ட அதிபர்களின் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படியும் குடுவில் அல்ஹிறா வித்தியாயலம் மூடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X