2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இறக்காமத்தில் சட்டவிரோத கட்டடங்கள் அகற்றல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 25 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்காமத்தில் சட்டவிரோதமாக வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள், நேற்று முதல் அகற்றப்பட்டு வருவதாக, இறக்காமம் பிரதேச சபையின் செயலாளர் எல்.எம். இர்பான் தெரிவித்தார்.

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதான வீதி அபிவிருத்தியின் பொருட்டு, இவை அகற்றப்படுகின்றன.

இறக்காமம், ஆலையடிச் சந்தியில்  சுற்றுவட்டம் அமைப்பதற்காக வேண்டி அந்த இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றுமாறு, பலமுறை கட்டடச் சொந்தக்காரர்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரையில் அக்கட்டடங்கள் அகற்றப்படாமல் இருந்தன.

இதனால் வீதி அபிவிருத்தி வேலைகள் தாமதமடைத்து வருவதையிட்டு, சட்டவிரோத கட்டங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அமைச்சால் 86 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, அபிவிருத்தி வேலைகளை கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .