2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இறந்தவரின் சிம்காட்டைப் பயன்படுத்திய பெண் கைது

Administrator   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஆறு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் மரணித்தவரின் அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் கார்ட் பெற்று பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.பேரின்பராஜா, நேற்று வெள்ளிக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை சவளக்கடை 15 ஆம் கொலனிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் 2010ஆம் ஆண்டு வெளிநாடு சென்று 02 மாதங்களின் பின்னர் அங்கு மரணமடைந்துள்ளார்.

 கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நிறுவனத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுவரும் சிம் காட்டுக்கு பணம் செலுத்துமாறு கூறப்பட்டமையைத் தொடர்ந்து, இறந்தவரின் மனைவி சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், பதுளை பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண்ணை, வியாழக்கிழமை (08) பொலிஸார் கைதுசெய்து கல்முனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X