2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இறந்த நிலையில் யானை மீட்பு

Niroshini   / 2017 மார்ச் 05 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாகாமம் பெரியதிலாவ வயல் பிரதேசத்தில் நேற்று (04) யானை ஒன்று, இறந்த நிலையில் காணப்பட்டது.

சுமார் 7 அடி கொண்ட 30 வயது மதிக்கதக்க பெண் யானையே இவ்வாறு இறந்துள்ளதாக திருக்கோவில் பிரதேசத்துக்குப் பொறுப்பான வனஜீவராசிகள் அதிகாரி ரி.ஜெகதீஸ் தெரிவித்தார்.

இறந்த யானைக்கு அருகில் நீண்ட நேரமாக சுற்றிந்திரிந்த அதன் குட்டி ஒன்றினையும் பாதுகப்பாக காட்டுப்பிரதேசத்துக்குள் அனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாய் வெடி மூலம் அது இறந்திருக்கலாம் எனவும் வைத்திய பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னரே உண்மை நிலையயை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

இறந்த யானையின் துதிக்கையை பிடித்து இழுப்பதும் தாய் யானையை சுற்றி சுற்றி அலறிய படி பல மணிநேரம் அதன் குட்டி போரடியமையும் கவலை அழித்ததாக நேரில் கண்ட பலர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .