Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தேசிய சமூக சேவை மாதத்தின் இறுதி நாள் நிகழ்வு, சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு 2016ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பொலிஸ் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி மற்றும் நடமாடும் சேவை, மருத்துவ முகாம் என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.தம்பிக்க பியந்த, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜெ.எஸ்.கருணாசிங்க, லயன்ஸ் கழகத்தின் மேலதிக ஆளுநர் சபையின் பொருளார் என்.வீ.ரஞ்சன், லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு, அம்பாறை பிராந்திய தலைவர் எஸ்.ஸ்ரீரங்கன், நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago