Janu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது வீட்டிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
அப்துல் ரஹ்மான் ஸகீன் அஹமட் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கையடக்கத் தொலைபேசி விளையாட்டுகளில் (Mobile Games) அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர் எனத் தெரியவந்துள்ளதுடன், தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு மற்றும் வாக்குவாதத்தைத் தொடர்ந்தே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காதல் விவகாரம் மற்றும் வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர், ஜனாஸாவை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்,ஏ.எல்.எம்.ஷினாஸ்

1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026