எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீதியால் சென்ற மாணவியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற மேற்படி இரு இளைஞர்கள், மாணவி மீது பாலியல் சேட்டை புரிய எத்தனித்துள்ளனர்.
இதனையடுத்து, மாணவியின் பெற்றோரால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த இரு இளைஞர்களும் பொலிஸாரால் நேற்று (17) கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வே. சிவக்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்செய்தபோது, எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago