2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி புதிய கட்சி அல்ல’

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பது புதிய கட்சி அல்ல. இலங்கை அரசியலில் ஒன்றாக் கலந்த கட்சியென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் துரையப்பா நவரெட்ணராஜா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயககட்சியின் (EPDP) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு, கல்முனையில் நேற்று (21)  மாலை நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், போராட்டக் காலம் முதல் தமிழர்களுக்காக போராடிய தலைவர் டக்ளஸ் தேவானந்தா. ஏனைய தமிழ் தலைமைத்துவங்களோடு தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். 

“அம்பாறை மாவட்டம் மட்டுமல்லாது, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் அபிவிருத்திகளைச் செய்தவர். தமிழர்களுக்காக கபினட் அமைச்சு பதவியை பெறும் ஒரே தலைவராகவும் இருக்கின்றார். இதன் காரணமாகவே, அவருடன் இணைந்து நாங்கள் பயணிக்க முடிவெடுத்தோம்.

“அம்பாறைமாவட்டம் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்த மாவட்டம். ஆனாலும், இதுவரையில் இங்குள்ள அரசியல் பிரச்சினைகள், மக்களது தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை. அதற்கான தீர்வும் இதுவரையில் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாக அமைந்துள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .