2025 மே 01, வியாழக்கிழமை

உணவுச்சாலை திறந்து வைப்பு

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடறாஜன் ஹரன்

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் பல்லின பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் உணவுச்சாலையொன்று, “அமுது - சமூக நிறுவக அட்டில்சாலை” எனும் பெயரில் நேற்று (03) திறந்து வைக்கப்பட்டது.

“உணவு உற்பத்தி ஆண்டு - 2018” என்ற ஜனாதிபதியின் பிரகடனத்துக்கமைய, பாரம்பரிய உள்ளூர் உணவு வகைகளைத் தயாரித்து வழங்கும் நோக்கில், சமூகங்களை இணைத்து, அவர்களின் உற்பத்திகளுக்கான களத்தைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடாக இது அமைந்துள்ளது.

அதேவேளை, மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைத் தாண்டி பல்லின சமூகத்தில் காணப்படுகின்ற சுய உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாகவும் இது அமைகிறது என, நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .