2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

உர மானியம் வழங்க நடவடிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத்தின் உர மானியத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இம்முறையும் உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிராமிய பொருளாதார, விவசாய மற்றும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி தெரிவித்தார்.

உரிய நேரத்தில், 50 கிலோகிராம் உர மூடை 500 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்குமாறு, உர நிறுவனங்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு, அரசாங்கம் வழங்கும் உரத்தை மோசடிக்கு உட்படுத்துவோருக்கு எதிராக அரச சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.

வடக்கு, கிழக்கு விவசாயிகளின் காலடிக்கு உரத்தைக் கொண்டு செல்வதற்கான பிரதேச களஞ்சியசாலை வசதிகளையும் விவசாய அமைப்புகளின் கோரிக்கைக்கமைய ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .