Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கொவிட்-19 கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் வாழ்வாதாரத்தை இழந்து வாழும் குடும்பங்களுக்காக நிவாரணப் பணிகளை நல்லுள்ளங்களின் உதவியுடன், பல சமூக சேவை அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஆலையடிவேம்பில் ஏரம்புவின் வேண்டுகோளுக்கு இணங்க, கனேடிய தமிழ் பேரவையின் வட, கிழக்கு நடுவத்தின் அம்பாறை மாவட்ட ஏற்பாட்டாளர் சமூக நேயன் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் தலைமையில் ஆலையடிவேம்பு, பனங்காடு பிரதேசத்தில் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு, பனங்காடு நாககாளி அம்மன் கோவிலில் நேற்று (22) நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கனேடிய தமிழ் பேரவையின் வட, கிழக்கு நடுவத்தின் அம்பாறை மாவட்ட ஏற்பாட்டாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் நவநீதன், இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .