2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

உல்லாசப் பயணிக்கு நட்டஈடு செலுத்துமாறு உத்தரவு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அறுகம்பைப் பிரதேசத்திலுள்ள  உல்லாச விடுதி ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான உல்லாசப் பயணிக்கு 60 ஆயிரம் ரூபாயை நட்டஈடாகச் செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன் உத்தரவிட்டார்.

கடந்த ஜுலை மாதம் குறித்த உல்லாச விடுதியில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வின்போது, 6  பேர் ஒன்றுசேர்ந்து குறித்த  உல்லாசப் பயணியை பொல்லால் தாக்கியுள்ளனர்.  

இதை அடுத்து, குறித்த 6 பேரும்; கைதுசெய்யப்பட்டு நீதிமன்றப் பினையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை புதன்கிழமை (28) நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, தாக்குதலுக்கு உள்ளான உல்லாசப் பயணிக்கு தாக்கிய நபர்களை நட்டஈடு செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X