Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு, பயிற்சிச் செயலமர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளவென, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், இன்று (25) தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில், மொத்தம் 45 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல், இவ்வாண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்றது.
இத்தேர்தலின் மூலம், தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, உள்ளூராட்சிமன்ற சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, புதிய உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு மாவட்ட ரீதியில் பயிற்சிச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.
இதன்மூலம், அக்கரைப்பற்று, கல்முனை, மட்டக்களப்பு மாநகர சபைகள், திருக்கோணமலை, அம்பாறை, காத்தான்குடி, ஏறாவூர், கிண்ணியா நகர சபைகள் மற்றும் 37 பிரதேச சபைகள் என்பனவற்றின் உறுப்பினர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பயிற்சிச் செயலமர்வின் போது, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பணிகளுக்கு உதவும் வகையில், நிதி, நிர்வாகம், உள்ளூராட்சி கட்டளைச் சட்டம் என்பன தொடர்பில், விரிவான விளக்கமளிக்கப்படவுள்ளன. துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு விளக்கமளிக்கவுள்ளதாகவும், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago