2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஊடகவியலாளருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு

Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எம்.ஏ.றமீஸ்

ஊடகவியலாளர் தகைமையை நிருபிக்கும் பட்சத்தில், 5,000 ரூபாய் கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அம்பாறை மாவட்ட சமூர்த்திப்  பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தால் ஊடகவியலாளர்களுக்கு  எவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என்ற செய்தியாளர் சந்திப்பு, நேற்று (18) மாலை நடைபெற்ற வேளை அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், “நிரந்திர சம்பளத்தை பெறாத பகுதி நேர ஊடகவியலாளர்கள், தமது ஊடக நிறுவனத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும். எமக்கு ஊடக அமைச்சின் ஊடாக  பெயர் பட்டியல் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பெயர் இல்லாதவர்கள் கூட தத்தமது ஊடக தகைமையை  உறுதிப்படுத்தி  குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்.

“தற்போது இப்பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஊடகவியலாளர் தகைமையை நிரூபிக்கும் பட்சத்தில் 5,000 ரூபாய் கொடுப்பனவு நிபந்தனையுடன்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .