எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாட்டில் வாழும் அனைவரும் இலங்கையர் என்ற கோட்பாட்டின் கீழ் வாழ வேண்டும். எங்களிடத்தில் சாதி மத பேதம் இருக்கக் கூடாது” என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்கு மக்கள் விடுதலை முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பொத்துவிலில் நேற்று (13) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமும் மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையாக சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள்.
“அவ்வாறு இருப்பவர்கள் மக்களிடத்தில் பிரிவினைகளை ஏற்படுத்தி, அதனூடாக அவர்கள் அரசியல் இலாபம் தேடுகின்றார்கள். இதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பொது மக்கள் வீண் பிரச்சினைகளுக்கோ, பிரிவினைகளுக்கோ செல்லக் கூடாது.
“இந்நாட்டில் ஊழலும் மோசடிகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. ஊழலை ஒழிப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணி, நாடு தழுவிய ரீதியில் தனது செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
“ஊழல் அற்ற அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே கட்டியெழுப்ப முடியும்” என்றார்.
32 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago