2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எஸ்.பி. கனகசபாபதி கனடாவில் காலமானர்

Editorial   / 2022 ஜனவரி 20 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.பி. கனகசபாபதி, கனடாவில் நேற்று முன்தினம் (18)  காலமானர்.

இவர், 90ஆம் ஆண்டு காலப் பகுதியில் திருக்கோவில் முருகன் கோவிலின் படம் பொறிக்கப்பட்ட கனேடிய முத்திரையை வெளியிட்டு, திருக்கோவில் பிரதேசத்தை உலகறிய செயித்திருந்தார்.

1945 மட்டக்களப்பு, திருக்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளரான கனகசபாபதி பூபாலபிள்ளை, எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்ககளில் கவிதை மற்றும் திருக்கோவில் பிரதேச  இந்துக் கோவில்களுக்கு பக்திப் பாடல்கள் எழுதியுள்ளார்.

அத்துடன்,  திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் ஆகியன இவரது நூல்கள் ஆகும்.

இவர், கனடா மொன்றியல் ஈழத் தமிழர் ஒன்றியத் தலைவராகவும், பண்பாட்டுத் தமிழுறவு மன்ற கியூபெக் அமைப்பாளராகவும் இன்னும் பல அமைப்புக்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மேலும், தனது படைப்பாற்றலுக்காக சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கத்தையும் புலமைப் பரிசில்களையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .