2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) அமர்வின் ஒரு பகுதியாக, இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.

அமைச்சர் விஜித ஹேரத் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் ஒரு பதிவில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்த விவாதம் மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறினார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் விஜித ஹேரத் நியூயார்க்குக்கு செல்கின்றார், அங்கு ஜனாதிபதி புதன்கிழமை (24) அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (UNGA) இல் உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை களையும் நடத்துவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,அமைச்சர் ஹேரத் அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் அலிசன் ஹூக்கரையும் சந்தித்தார்.இருதரப்புஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னேற்றுவது குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .