2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ் போதைப்பொருள் கடத்தல்; குடும்பஸ்தர் கைது

Editorial   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றவரை, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில்  வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று (20) இரவு கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 64.286 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பக்கெட் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி 6ஆம் பிரிவைச் சேர்ந்த  50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே மேற்படி ஐஜ் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்று பொருள்கள் யாவும் காத்தான்குடி பொலிஸரிடம் சட்ட நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் பாராப்படுத்தப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X