Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ், பைஷல் இஸ்மாயில், எம்.சி. அன்சார்
“ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என்பதால், அந்தக் கட்சியுடன் சேர்வதுதான் பொருத்தமாகும்” என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.கலீல் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைச்சரும் கட்சியின் தலைவருமான ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடியாது. அதேபோன்று, மஹிந்த அணி முற்றாக ஒதுக்கப்பட்ட நிலையில், நமக்கு இருக்கும் இலகுவானதும் பொறுத்தமானதுமான தெரிவு, ஐக்கிய தேசியக் கட்சியாகும்.
“கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின், மூன்று மாவட்டங்களிலும் அந்தக் கட்சியுடன் இணைய வேண்டும். நமது எதிரிகள் முழுமையாக தோற்கின்ற நிலை, இதன்மூலம் உருவாகும்.
“மக்களுக்கான வேலைத்திட்டங்களை கட்சியில் பதவியில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் சிறந்த முறையில் முன்னடுத்துச் செல்ல வேண்டும்.
“எல்லோருக்கும் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எல்லாம் அவர்கள்தான் என்ற நிலையை மாற்றியமைக்கப்பட வேண்டும். நமது தலைவரின் கரங்களைப் பலப்படுத்தி, கட்சியை அழிக்க நினைக்கும் சதிகாரர்களுக்குத் தகுந்த பாடத்தை புகட்ட கட்சிப் போராளிகள் களத்தில் இறங்க வேண்டும்” என்றார்.
8 minute ago
17 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
35 minute ago