எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கல்முனை நகரில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் (ஒசுசல) கிளையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம். அன்சார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிமுக்கு இன்று (13) அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாண்டிருப்பு, துறைநீலாவணை, நாவிதன்வெளி, கல்முனைகுடி, சாய்ந்தமருது, மருதமுனை, நட்பிட்டிமுனை, சொறிக்கல்முனை, கல்லாறு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்கள் கல்முனை நகரை அண்மித்த பிரதேசங்களாக இருப்பதால் 'அரச ஒசுசல' ஒன்றை நிறுவும் பட்சத்தில், இப்பிரதேச மக்கள் நிச்சயமாக உச்ச பயனைப் பெறுவார்கள்.
கல்முனை நகரில் இரண்டு ஆதார வைத்தியசாலைகள் உட்பட அண்டிய பிரதேசங்களில் மத்திய மருந்தகங்கள், பிரதேச வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் என்பன காணப்படுகின்றன.
நோயளர்கள் மருந்துப் பொருட்களை பெருமளவில் தனியார் மருந்தகங்களில் கொள்வளவு செய்கின்றனர். இதற்கு பெருமளவு பணமும் தேவைப்படுகின்றது. இதனால் நடுத்தர, ஏழை வர்க்கத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆகவேதான் மக்கள் நலன் கருதி 'அரச ஒசுசல' கிளையொன்றை நிறுவ வேண்டிய கட்டாயத் தேவை உருவாகியுள்ளது. இதனை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்” என அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026