Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, பைஷல் இஸ்மாயில், ஏ.எச்.ஏ. ஹுஸைன
ஒரு சில சிங்கள அமைப்பினர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இடையே உள்ள இன ஒற்றுமை இல்லாமல் போகும் அபாயம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சால் மண்டூர் பிரதேசத்தில் புதிதாக 5.3 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (04) இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நல்லாட்சி அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையுடன் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த ஆட்சியில் சில பௌத்த அமைப்புகளில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைகள் சீரழிந்திருந்தது. அதனால் அவ்வாட்சியை, சிறுபான்மை மக்கள் விரட்டினார்.
“ஆனால், இன்றும் நல்லாட்சி அரசாங்கத்திலும் சில பௌத்த அமைப்புகளின் கொடுபிடிகள் அம்பாறை மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டுகின்றன.
“இறக்காமம், மாணிக்கமடு பிரதேசத்தில் தமிழ் மக்களின் காணிகளை கொள்வனவு செய்து, சிங்கள மக்களே இல்லாத இடத்தில் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு முஸ்தீபுகள் இடம்பெற்றாலும் அவற்றை நாம் முறியடித்துள்ளோம்.
“இவ்வாறு தமிழ், முஸ்லிம், சிங்கள ஒற்றுமைகள் சீரழிக்கப்படுகின்றதை நாம் அவதானத்துடன் செயற்பட்டு, அவற்றுக்கு சரியான தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகள் மூலமே சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago