Princiya Dixci / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூ.எல். மப்றூக் , பாறுக் ஷிஹான்
ஒரு மகனை உரிமை கோரும் இரண்டு தாய்கள் தொடர்பான வழக்கில், உண்மையைக் கண்டறியும் பொருட்டுமரபணுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அதற்குரிய பணத்தை திரட்டிக் கொண்டு, நவம்பர் மாதம் 24ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு, நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில், நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஒரே மகனை உரிமை கோரும் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா மற்றும் அம்பாறையைச் சேர்ந்த நூறுல் இன்ஷான் ஆகியோரும், சர்சைக்குரிய மகனும், ஹமாலியாவின் முன்னாள் கணவர் ரசீட் என்பவரும், நூறுல் இன்ஷானுடைய முன்னாள் கணவர் அமீர் என்பவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய மகனின் பெற்றோர் யார் என்பதைக் கண்டறியும் பொருட்டு, மரபணுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளமையால் அதற்குரிய செலவினை சம்பந்தரப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டுமென, நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்றும், தான் வறுமை நிலையில் உள்ளதாகவும் நூறுல் இன்ஷானின் முன்னாள் கணவர் அமீர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பணத்தைத் திரட்டிக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கால அவசகாசத்தை வழங்குவதாகத் தெரிவித்த நீதவான், எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி, மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026