2025 மே 05, திங்கட்கிழமை

ஒலுவில் காணியை வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா,  ரீ.எல்.ஜவ்பர்கான், எப்.முபாரக்

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் காணியை, வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்குவதற்கு மாவட்ட செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கை, மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, கொழும்பில் நேற்று (16) நடைபெற்றது.

இதன்போதே, மேற்படி காணி விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பாறை மாவட்டத்திலுள்ள காணி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விரைவில் உயர்மட்டக் கூட்டமொன்றை நடத்துவதற்கும் ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றுவதால் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், அவ்வாசிரியர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைவாக, இடாற்றம் கோரியுள்ள நீண்ட காலமாக வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு, இரு வாரங்களுக்குள் நிரந்தரத் தீர்வை வழங்குவதாகவும் குறிப்பாக அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த வலயங்களில் கடமையாற்றுவதற்கு ஏதுவாக இடமாற்றங்களை வழங்குவதாகவும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X