2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கடந்த 21 ஆம் திகதி மாலை படகு ஒன்றில் குறித்த இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். 

எனினும் அவர்கள் இருவரும் வீடு திரும்பாமை காரணமாக நேற்று வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காணாமல் போன மீனவர்கள் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. 

கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .