Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுவில் துறைகத்தால் காணிகளை இழந்த காணி உரிமையாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு, மிக விரையிவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
இது விடயமாக அவர், இன்று (31) மேலும் தெரிவிக்கயில்,
“ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணப் பணியின் காரணமாக, அப்பிரதேச மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தன. இக்காணி உரிமையாளர்களில் சிலர், மிக நீண்ட காலமாக நட்டஈடுகள் எதனையும் பெறாமல் இருந்து வந்துள்ளனர்.
“இதனையடுத்து, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்து, ஒலுவில் மக்களின் துறைமுக காணிப் பிரச்சினை சம்மந்தமாக விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இச்சந்திப்பின் போது, நட்டஈடாக பாதிக் காணியும் மிகுதி பாதி காணிக்கு பெறுமதியான பணமும் வழங்க துறைமுக அதிகார சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய முடிவு எடுக்கப்பட்டு, இறுதி கட்ட வேலைகளுக்கான நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையை அடைந்துள்ளது.
“இதேவேளை, துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பது சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசனையின் பிரகாரம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கிடையிலான சந்திப்பை மிகவிரைவில் துறைமுக அதிகார சபையில் நடத்துவதற்கான சந்தர்ப்பமும் இதன்போது கிட்டியுள்ளது” என்றார்.
13 minute ago
23 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
33 minute ago
37 minute ago