Editorial / 2017 டிசெம்பர் 09 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம். ஹனீபா
ஒலுவில் பிரதேச கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் நேற்று முன்தினம் காணாமல் போன மீனவரின் சடலம், நேற்று (08) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடிக்கச் சென்று கரையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் பாரிய அலையினால் அடிக்கப்பட்டு படகு கவிழ்ந்ததில் படகை ஓட்டிச் சென்ற ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் அபுசாலி முகம்மது இப்றாஹிம் (39) காணாமல் போயிருந்தார்.
இவரைத் தேடும் பணியில் மீனவர்களும், கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு முன்பாக கடற்கரை பிரதேசத்தின் கற்பாறைக்குள் புகுந்த நிலையில் மீட்க முடியாத நிலையில் சடலம் காணப்படுவதாக பொலிஸாரும், மீனவர்களும் தெரிவித்தனர்.
மேற்படி சடலத்தை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல், சம்பவ இடத்துக்குச் விரைந்து பார்வையிட்டதுடன், சடலத்தை மீட்டதன் பின்னர் மருத்துவ பரிசோதனையின் பொருட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு, உறவினர்களுக்கு பணித்தார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago