Janu / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால் சூட்சுமமான முறையில் நடத்தி செல்லப்பட்ட கசிப்பு தயாரிப்பு நிலையத்தை கடந்த சனிக்கிழமை(21) இரவு சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது மிக சூட்சுமமான முறையில் கசிப்பு தயாரிப்பு நிலையத்தை நடத்தி சென்ற சம்மாந்துறை வீரமுனை 03 பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 80,000 மில்லி லிட்டர் கசிப்பு , 170,000 மில்லி லிட்டர் கோடா, 130,000 மில்லி லிட்டர் வடி, 210 லிட்டர் இரும்பு பரல் ஆகிய மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபரிடமிருந்து சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கசிப்பு தயாரிப்பு உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் யாவும் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்

7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026