Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை, மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11ஆம் கொலனி பகுதியில், நேற்று (21) சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 25 வயதுடைய இளைஞன், விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, 1 கிலோ 155 கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மற்றும் சான்றுப்பொருள்கள் யாவும் மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய, மாவட்ட கட்டளை அதிகாரி கே.ஜி நளீன் பேரேரா வழிகாட்டலில், களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் மேற்படி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
18 minute ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
7 hours ago