Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
அரச அங்கிகாரத்துடன், தேசிய கலாசார விழாவாகக் கொண்டாடப்படவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்று விழாவுக்காக கல்முனை மாநகர சபையால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களைக் கையாள்வதற்காக விசேட செயலாற்றுக் குழுவொன்று, மாநகர மேயரால் நியமிக்கப்பட்டுள்ளது.
இக் கொடியேற்று விழா ஏற்பாடுகள் தொடர்பாக கல்முனை மாநகர சபையில், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இன்று (30) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இக்குழுவினரை நியமனம் செய்தார்.
மாநகர சபையின் அதிகாரிகள் தரப்பில் ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், சுகாதாரப் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சபை சார்பில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் மாநகர சபை உறுப்பினர்காளான எம்.எஸ்.எம்.நிசார், ரொஷான் அக்தர், ஏ.சி.ஏ.சத்தார், எம்.எம்.பைரூஸ், ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.எம்.ஹாரிஸ் ஆகியோருடன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா மற்றும் 12ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எஸ்.எம்.பளீல் ஆகியோரும் இக்குழுவுக்கு அங்கத்தவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹாவின் கொடியேற்ற விழா, எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக 12 நாள்கள் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
54 minute ago
2 hours ago