எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, கடல் ஓரம் பேணல் மற்றும் கடல் மூல வள முகாமைத்துவத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம். ஜெஸூர் தெரிவித்தார்.
இதற்கமைய, கடலரிப்பைத் தடுப்பதற்கு 1,600 மண் மூடைகள் முதற்கட்டமாக இடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்புக் காரணமாக கடற்கரையை அண்டி வாழும் பொதுமக்கள் பல அசௌகரிகங்களை எதிர்கொள்வதோடு, மீனவர்களின் மீன்பிடி வாடிகள் சேதமடைந்துள்ளதுடன், தென்னை மரங்களும் அழிவை எதிர்நோக்கியுள்ளன.
அத்துடன் கடல் சார்ந்த நிலப்பரப்பும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமையவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago