2025 மே 15, வியாழக்கிழமை

கடலரிப்பை தடுப்பதற்கு துரித நடவடிக்கை

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் ஹனீபா

அம்பாறை - ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்காவிடம் பொதுமக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, கடலரிப்பு ஏற்பட்டுள்ள பிரதேசத்தை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் அதிகாரிகள், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

கடலரிப்பை தடுப்பதற்கு முதற்கட்டமாக மண் மூடைகளை இடவுள்ளதாகவும், நிரந்தரமாகக் கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்லிலான தடுப்புச் சுவர் நிர்மாணிப்பதற்கான திட்ட வரைபை மேற்கொள்ளவுள்ளதாகவும், தெரிவித்தார்.

கடலரிப்பால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்களை அடையாளப்படுத்துவதற்கான மும்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு, மாவட்டச் செயலாளர் கோரியுள்ளதாகவும், கூறினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுற்று மதில் நீரில் அடித்துச் செல்லக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதோடு, கடல் நீர் கரையை நோக்கி சுமார் 150 மீற்றர் தூரத்திற்கு வந்துள்ளதால், அண்டிய பிரதேசங்களிலும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பு தொடர்;ச்சியாக ஏற்பட்ட வண்ணம் உள்ளதால்  மீனவர்களின் வாழ்வாதாரம், தென்னந்தோட்டங்கள், வீடுகள், பொது கட்டங்கள் என்பன பாதிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக கிழக்கு பக்கமாகவுள்ள பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நில, துறைமுக சுற்றுலா விடுதி பிரதேசம் என்பனவும் கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .