Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2018 ஜனவரி 01 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களுக்கு சேவை செய்யக் கூடிய ஒருவனாகவே அட்டாளைச்சேனை பிரதேசசபையில் இருப்பேன் இல்லையென்றால் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்கவும் தயங்க மாட்டேன் என, முஸ்லிம் காங்கிரஸின் அறபா வட்டார வேட்பாளரும், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான தமீம் ஆப்தீன் நேற்று (31)தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, ஏ.சி.பள்ளி முன்றலில் இடம்பெற்ற பிரச்சார கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் எமது வட்டார மக்களின் அரசியல் ரீதியான கருத்துக்களை அரசியல்வாதிகள் புறக்கணித்து வந்துள்ளார்கள். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்துக் கொண்டு கட்சியின் சுக நலன்களை அனுபவித்துக் கொண்டு இருந்தவர்கள்தான் இன்று கட்சிக்கு வாக்களிக்க கூடாது என, தடுத்து வருகின்றார்கள்.
இவர்களின் சுயநலம் இன்று முளையிலேயே தெரிந்துவிட்டது. இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுத்து கட்சியை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டியது அவசியமாகும்
இந்த வட்டாரம் முஸ்லிம் காங்கிரஸிக்கு என உறுதியாக்கப்பட்டதாகும் இதில் வேறு யாரும் தலையிட முடியாது. பொய்யான வார்த்தைகளால் நம்மை ஏமாற்ற முடியாது என்பதனை தேர்தல் முடிவின் மூலம் காட்டுவோம்.
முஸ்லிம் காங்கிரஸிக்காக உயிரை தியாகம் செய்யக்கூடிய மக்கள் நிறைந்த வட்டரம் இது. இதனால் மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு தேவையானதை பிரதேச சபையின் அதிகாரத்தைக்கொண்டு செயல்படுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
26 minute ago
34 minute ago