2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கட்டட நிர்மாணத்துக்கு ஆளுநர் ஒத்துழைப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்கும் பொதுச் சந்தைக்கும் புதிய கட்டடத் தொகுதிகளை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை துரிதப்படுத்துவதற்கு, கிழக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென, மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகம, கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீபிடம் உறுதியளித்துள்ளார்.

கல்முனை மாநகர சபைக்கு, நேற்று (02) விஜயம் மேற்கொண்டு, முதல்வரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே, ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இந்த கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்து கொண்ட ஆளுநர், அவற்றுக்கான பட வரைபுகளைப் பார்வையிட்டு, அவற்றிலுள்ள அம்சங்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தினார்.

இவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கு வேண்டிய ஒத்துழைப்பை தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அத்துடன், கல்முனை மாநகர சபையில் நிலவும் வளப்பற்றாக்குறைகள், தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தீயணைப்புப் படைப்பிரிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தீயணைப்புப் படையினரின் நிரந்தர நியமனம் தொடர்பிலும் ஆளுநரிடம் முதல்வர் றகீப் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், கிழக்கு மாகானத்திலுள்ள ஏனைய மாநகர சபைகளையும் உள்ளடக்கியதாக இவ்விடயம் தொடர்பில் விசேட கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்வதற்கான நேர ஒதுக்கீட்டை வழங்கினார்.

மேலும், கல்முனை மாநகர சபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்தும் இதன்போது முதல்வரால் வலியுறுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .