Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 26 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நம்பிக்கையாளர் சபையில் முறைகேடான விடயங்கள் இடம்பெறுவதால், உடனடியாக அச்சபையைக் கலைத்து விட்டு புதியதொரு நம்பிக்கையாளர் சபையை அமைக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள், கண்டனப் பேரணியை இன்று(26) நடத்தினர்.
பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தெரிவு, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது அச்சபையின் தலைவராக பொறியியலாளர் ஐ.எல்.ஹைதர் அலி என்பவர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நம்பிக்கையாளர் சபைக்குரிய கால எல்லை இன்னும் மீதமிருக்கையில், சுமார் பத்து மாதங்களே நிறைவடைந்துள்ள இத்தருணத்தில் தற்போதுள்ள தலைவர் நீக்கப்பட்டதாக பள்ளிவாசலின் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
அத்தோடு அச்சபையின் செயற்பாடுகள் சுயநலத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி பிரதேச மக்கள், கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.
கண்டனப் பேரணி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் எதிர்த்தரப்பினர் எனக் கருதப்படும் சிலர் அவ்விடத்துக்கு சமூகமளித்து கருத்து மோதலில் ஈடுபட்டதால், அப்பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதைத்தவிர, புதிய நம்பிக்கையாளர் சபையை ஏற்படுத்துமாறு கோரிய கையெழுத்து வேட்டையொன்றும் இதன்போது இடம்பெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துககு அனுப்பி வைக்கும் வகையில், பெருந்தொகையான பொதுமக்கள் இதில் கையெழுத்திட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
8 hours ago
9 hours ago