Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Thipaan / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.அறூஸ்
இறக்காமம், மாணிக்க மடு சிலையை அகற்றக் கோரியும் முஸ்லிம்களின் காணியில் விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்தும், அக்கறைப்பற்று பட்டினப்பள்ளிவாசலுக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில், ஆயிரத்துக்கும் அதிகமான சமூக வியலாளர்களும் பொது மக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களின் காணிகளை பறிக்காதே, இன முறுகலை ஏற்படுத்தாதே, சமாதானத்தைக் குழப்பும் இனவாதிகளை அடக்கிவை, முஸ்லிம்களை தீண்டாதே, ஜனாதிபதியே நல்லாட்சி இது தானா?,என இன்னும் பல்வேறு கோசங்கள் அடங்கிய வாசகங்களோடு, ஆர்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வாசலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பிரதேச செயலகத்துக்கு செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றபோது அக்கரைப்பற்று பொலிஸார் ஆர்பாட்டக்காரா்களைத் தடுத்து நிறுத்தினர்.
பொலிஸாரின் இச்செயலுக்கு எதிராக திரண்டெழுந்த மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இம்மோதலை தவிர்க்கும் முகமாக அக்கரைப்பற்று பொலிஸாரால் சம்பவ இடத்துக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் வர வழைக்கப்பட்டார். பிரதேச செயலாளருடன் தமது ஆர்பாட்டத்தின் நோக்கம்பற்றி இளைஞர்கள் தெளிவுபடுத்தினர்.
இதன்போது, சமாதானத்துக்குக் குந்தகம் விளைவிப்போருக்கு எதிரான தமது எதிர்ப்பை தெரிவிப்பதோடு புத்தர் சிலை நிறுவுவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago