2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கரும்புச் செய்கைக் காணிகளில் பெரும்போகச் செய்கை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 06 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வாக கரும்புச் செய்கைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் இம்முறை பெரும்போகச் செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எல்.எம்.பழீல், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கரும்புச் செய்கையின்போது ஏற்படும் நட்டம் காரணமாக கரும்புச் செய்கை  மேற்கொள்ளப்படும் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு மாவட்ட அரசாங்க துஷித பி.வணிகசிங்கவிடம் கரும்புச் செய்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த வேண்டுகோள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதி அமைச்சர் பைஷால் காசீம் மற்றும் மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.எம்.பழீல் மாவட்டச் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போது தெரியப்படுத்தினர்.   நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தீகவாபியில் 80 ஹெக்டேயர், ஆலங்குளத்தில் 110 ஹெக்டேயர்,  நுரைச்சோலையில் 197 ஹெக்டேயர் உட்பட  சுமார் 980 ஹெக்டேயர் கடந்த 02  வருடங்களாக கரும்புச் செய்கை இடம்பெறவில்லை எனவும் அரசாங்க அதிபரின் கவனத்துக்கு இவர்கள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் நுரைச்சோலை விவசாய அமைப்பு, ஆலங்குளம் விவசாய நீர்ப்பாசன அமைப்பு, அம்பாறை கள்ளியன்பத்தை அமைப்பு, கல்மடு விவசாயச் சங்கம், தீகவாபி கரும்புச் செய்கையாளர் சங்கம் ஆகியவற்றைச்; சேர்ந்த கரும்புச் செய்கையாளர்கள் சுமார் 1,000 பேர் நன்மை அடைவர் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .