Niroshini / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரையோர வைத்தியசாலைகளுக்கு சுமார் 25 இலட்சம் ரூபாய் பொறுமதியான பல்லூடக நுண்திரை இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.எம். அலாவுதீன் இன்று (15) திங்கட்கிழமை தெரிவித்தார்.
அண்மையில் கரையோர பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசிம் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் மேற்கொண்ட விஜயத்தின் போது வைத்தியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இவ்வியந்திரங்கள் சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசிம் மற்றும் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால ஆகியோரால் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற ஏழு இயந்திரங்களும் சம்மாந்துறை, திருக்கோவில், அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், மருதமுனை, பொத்துவில் ஆகிய வைத்தியசாலைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
இவ் இயந்தித்தின் மூலம் இதய நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ளலாமென அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago