Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 12 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாண கிராமிய தொழித்துறை திணைக்களம் ஒழுங்கு செய்துள்ள உள்ளூர் கைத்தொழில் உற்பத்திகளின் கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தை, கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இன்று (12) பிற்பகல் ஆரம்பமானது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், பிரதம அதிதியாக கலந்துகொண்டு, இதனை ஆரம்பித்து வைத்தார்.
கைத்தறித் துணிகள், உள்நாட்டு ஆடைகளின் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பற்றிக் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சின் ஆலோசனை, வழிகாட்டலில் இரண்டு நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வர்த்தக சந்தையில் பெரும் எண்ணிக்கையிலான உற்பத்திகள் அடங்கிய காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு காட்சிக் கூட்டத்தையும் பார்வையிட்ட ஆளுநர், உற்பத்திகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பாராட்டுத் தெரிவித்ததுடன், கைத்தறித் துணிகள் மற்றும் ஆடைகளைக் கொள்வனவு செய்தார்.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட ஆளுநர், கிழக்கு மாகாணத்தில் கைத்தறி உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு தாம் முன்னிற்பதாகவும் கைத்தறி உற்பத்தியாளர்கள் தமது தொழில்களை நவீன வசதிகளை கொண்டு விருத்தி செய்வதற்குத் தேவையான உதவிகள் பெற்றுத்தரப்படும் என்றும் இதன்போது உறுதியளித்தார்.
29 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago