Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனைப் பிராந்தியத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இறக்காமத்தில் 04 பேரும் நிந்தவூரில் ஒருவரும் நாவிதன்வெளியில் ஒருவருமே புதிதாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
'இவர்கள் ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இவர்கள் 06 பேரும் கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு இன்று (29) அனுப்பி வைக்கப்பட்டனர்.
“இதையடுத்து, இப்பிராந்தியத்தில் மினுவான்கொடை மற்றும் பேலியகொட கொத்தணிகள் ஊடான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 45 பேர் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்றார்.
இப்பிராந்தியத்தில் இன்னும் நூற்றுக்கணக்கானோரின் பிசிஆர். பரிசோதனை முடிவுகள் வரவேண்டியிருப்பதாகவும் நாளாந்தம் பலருக்கு இப்பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
58 minute ago
2 hours ago