Princiya Dixci / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை, மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞரன், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், நேற்று (22) காலை தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்களை நிறுத்தி, வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று கூறியவர்களுடன் இளைஞர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து இடம்பெற்றுள்ள சரமாரி வாள் வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 19 வயதான முஹம்மத் ஸபான் எனும் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டு வாயில் கதவு போன்றவற்றில் வெட்டுத் தடயங்கள் உள்ளதையும், இரத்த தடயங்கள் உள்ளதையும் அவதானிக்க முடிவதுடன், காணொளியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
38 minute ago
38 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
38 minute ago
48 minute ago
57 minute ago