2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கல்முனையில் 17 பேருக்கு தொற்று

Princiya Dixci   / 2020 நவம்பர் 02 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், சகா, ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து புதிதாக நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் கல்முனைப் பிராந்தியத்தில் தற்போது 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இதற்கமைவாக, இறக்காமம் பிரதேசத்தில் இருந்து இருவரும், அக்கரைப்பற்று மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்கள், மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 195 பேர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, அங்கிருந்த ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதனால் அவர்கள் சிசிச்சைக்கென தெல்தெனியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிசிஆர் பரிசோதனையின் போது தொற்றுக்கு இலக்காகவில்லை என அடையாளம் காணப்பட்டவர்களில் 182 பேர், இன்று (02) தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது வீடுகளில் மேலும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .