2025 மே 08, வியாழக்கிழமை

கல்முனை, சாய்ந்தமருது செயலக விவகாரம்: “விரைவுபடுத்துவது அவசியம்“

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை தமிழ்ச் செயலகம், சாய்ந்தமருது நகரசபை என்பவற்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அடுத்த ஒரு சில தினங்களில் நிறைவேற்ற முடியாது போனால், இனியொருபோதும் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விடலாமெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், 10ஆம் திகதியளவில் அவற்றை நிறைவு செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்முனை செயலகப் பிரிப்பு, சாய்ந்தமருது நகரசபை ஸ்தாபிப்பு விவகாரங்கள் குறித்து ஆராயும் முக்கியக் கலந்துரையாடல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், நாடாளுமன்ற குழு அறையில், புதன்கிழமை (31) மாலை நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், அலிஸாஹிர் மௌலானா, ஏ.எல்.எம்.நசீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அப்துல் மஜீத், செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கட்சியின் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதிநிதிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது நீண்ட காலமாக இழுபறி நிலையிலுள்ள இவ்விவகாரங்களால் சமூக, பிரதேச மட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதகமான சூழ்நிலைகள் தொடர்பிலும், அரசியல் குழப்பநிலை குறித்தும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், கல்முனை தமிழ் செயலகத்துக்கான எல்லையை நிர்ணயித்துக் கொள்கின்ற இழுபறியினாலேயே சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தாமதமடைவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X