2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை பஸ் நிலைய புனரமைப்பு துரிதம்

Editorial   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

18.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலைய வளாகத்தை புனரமைத்து, அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்புனரமைப்புப் பணிகளை, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இன்று (21) நேரில் சென்று பார்வையிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் 100 நகரங்களை செழுமைமிகு நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், கல்முனை நகரமும் உள்வாங்கப்பட்டு, முதற்கட்டப் பணியாக பஸ் நிலையம் வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில், பிரதமரின் விசேட பணிப்புரைக்கமைவாக மேற்படித் திட்டத்தில் கல்முனையும் உள்வாங்கப்பட்டிருந்ததுடன், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் எச்.எம்.எம்.ஹரிஸ் எம்.பி. மற்றும் மேயர் ஏ.எம்.றகீப் ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் முதற்கட்டமாக பஸ் நிலைய வளாக புனரமைப்புக்காக மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X