Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருதமுனையை சேர்ந்த அலியார் நெய்னா மொஹம்மத், கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்பை சந்தித்து, தனது நியமன மற்றும் சத்தியப்பிரமாணப் பத்திரங்களைக் கையளித்துள்ளார்.
இந்நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (23) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சி.எம்.முபீத் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக பதவி வகித்த வை.கே.ரஹ்மான், கட்சித் தலைமைத்துவத்தின் ஆலோசனையின் பேரில் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீனின் பரிந்துரையின் பேரில் அலியார் நெய்னா மொஹம்மத் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
26 minute ago
28 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
28 minute ago
31 minute ago