2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்முனை மாநகர சபைக்கு புதிய ஐந்து மாடிக் கட்டடம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜனவரி 29 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்கான புதிய ஐந்து மாடிக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான கட்டடக்கலை நிபுணர்கள் குழுவுடனான கலந்துரையாடல், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில், கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் கல்முனை மாநகர சபைக்கான புதிய 05 மாடிக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

குறித்த 05 மாடி கட்டடத்தின் தோற்றப்பாடு மற்றும் உள்ளக அமைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அதற்கமைவாக கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் குழுவால் கல்முனை மாநகர சபைக்கான கட்டட வரைபடம் தயார்படுத்தப்படவுள்ளதாக, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

வரைபட வரைபினை மேற்கொள்வதற்கான பணியை ஆரம்பிக்கும்வகையில், குறித்த கட்டடக்கலை நிபுணர்கள் குழுவினரால் நில அளவை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் சேனக்க, தொழில்நுட்ப நிபுணர் வித்தியாரத்ன, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தா, விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்தாப் ஹூசைன், விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .