2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கல்முனை மாநகர சபையில் பிரேரணை

Freelancer   / 2022 மார்ச் 01 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் 47ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றபோதே இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

பிரேரணையை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் சமர்ப்பித்திருந்தார். இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் வழிமொழிந்தார்.

இதையடுத்து மாநகர மேயர் உட்பட உறுப்பினர்கள் பலரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கருத்துரைத்தனர்.

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி எவ்வித குற்றமும் இழைக்காத அப்பாவி தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், புத்திஜீவிகளும் கைதுசெய்யப்பட்டு, வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர் என்று இதன்போது அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிஸார் இப்பிரேரணைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நிலையில், சபைக்குச் சமூகமளித்திருந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. (K)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .