Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்துக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்குமாறு கிழக்கு மாகாண சபையைக் கோரும் தனிநபர் பிரேரணையை எதிர்வரும் 20ஆம் திகதி மாகாணசபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்துக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியின் மூலம் மாகாண மட்டத்தில் நடத்தப்படும் கலாசார நிகழ்வுகள், கவிஞர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள், சமூகங்களின் பாரம்பரிய நிகழ்வுகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு முடியாமல் உள்ளது' என்றார்.
'மாகாண மட்டத்தில் நடைபெறும் கலாசார நிகழ்வுகள் ஊடாக இன உறவை ஏற்படுத்தி நிரந்தரமான சமாதானத்தை உருவாக்கவும் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் தத்தமது இனங்கள் சார்ந்த கலாசாரங்களையும் பண்பாடுகளையும் பாதுகாத்து வளர்த்தெடுக்கவும் வேண்டியுள்ளது. கலாசார நிகழ்வுகளையும் பாரம்பரிய நிகழ்வுகளையும் முன்னெடுப்பதால் ஒரு சமூகத்தின் கலாசார விழுமியங்களை மற்றைய சமூகம் புரிந்து கொள்ளக் கூடிய நிலையும் ஏற்படுகின்றது.
எனவே, எதிர்வரும் 2016ஆம் வருட நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்திற்கு ஒதுக்கப்படும் நிதியினை அதிகரிக்க கோரி தனி நபர் பிரேரனையை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது' அவர் கூறினார்.
34 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
44 minute ago
1 hours ago