Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபைக்கான அனைத்து வரிகளையும் அறவிடுவதற்காக அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர், நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இதன் மூலம் வரிகளை செலுத்தாதோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
கல்முனை பிரதேச சபையாக இருந்து மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டு, 15 வருடங்களாகியுள்ளன. இருப்பினும், இந்தச் சபைக்குட்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்களுக்கான சோலைவரி, வியாபார வரி மற்றும் விளம்பரக் கட்டணங்களை அறவிடுவதற்கு சட்ட ரீதியான ஏற்பாடு மேற்கொள்ளப்படாமையால் அவற்றை அறவிடுவதில் அசௌகரியங்கள் காணப்பட்டன. தற்போது இதை நிவர்த்தி செய்து சட்ட ரீதியாக வரிகளை அறவிடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (01) அரச வர்த்தமானியில் தன்னால் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னரும் வரி செலுத்தாதோர் மீது மாநகர சபையால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு வரி அறவிட முடியுமெனவும் அவர் கூறினார்.
கல்முனை மாநகர சபைக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் பொதுமக்கள் செலுத்த வேண்டிய சோலை வரி நிலுவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
25 minute ago
34 minute ago