2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கல்முனையில் கலந்துரையாடல்

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்​

கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் ஏற்ப்பாட்டில் கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான நட்புரீதியான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது,கல்முனைப் பிரதேசத்தில் தற்போது எதிர்கொள்ளப்படும் சவால்களான  கல்வி,அபிவிருத்தி,பொருளாதார அபிவிருத்தி,சுகாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள்,வாழ்வாதார வசதிகள், மக்களின் ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எஸ்.அப்துஸ் சமத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் விசேட அதிதிகளாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் மற்றும் பலரும்  கலந்துசிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .